குழந்தைகளின் கோரிக்கையை நிறைவேற்றிய விஜய், நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

0
148

விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றியை தழுவிய படம் ‘தெறி’. இப்படம் ரசிகர்களின் மத்தியில் இடம்  பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்று ஓடி கொண்டிருகிறது.

இந்த நிலையில்  நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளை ட்ரஸ்ட்டில்ருந்து 60 குழந்தைகள் ‘தெறி’ படத்தை பார்க்க விரும்பினர். அதனால் லாரன்ஸ் உடனே விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து பேசினர், குழந்தைகள் தெறி படத்தை பார்க்க ஏற்பாடு செய்தார். படத்தை பார்த்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தைகளை படம் பார்க்க வைத்து மகிழ்ச்சியடைய வைத்த என்னுடைய நண்பர் விஜய்க்கு மிகவும் நன்றி என்று லாரன்ஸ் தெரிவித்தார்.

அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர், மேலும் மகேந்திரன், நைனிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY